search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குந்தா அணை"

    • தினசரி 455 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.
    • இரு மதகுகளில், தலா 200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

    ஊட்டி

    குந்தா அணை துார்வாரப்படாததால் இரு மாதங்களில் 8 முறை திறந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டம், குந்தா, மின் வட்டத்துக்கு உட்பட்ட குந்தா அணை, 89 அடியை கொண்டது இந்த அணையில் தேக்கப்படும் தண்ணீர் மூலம், கெத்தை, பரளி, பில்லுார் ஆகிய மின் நிலையங்களில் தினசரி 455 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். முக்கிய அணையாக கருதப்படும் குந்தா அணைக்கு தண்ணீர் வரும் நீர் பிடிப்பு பகுதிகளில், தேயிலை, மலை காய்கறி தோட்டங்கள் பல ஏக்கரில் உள்ளது.பருவ மழை காலங்களில் நீரோடைகளில் அடித்து வரும் சேறும், சகதியும் அணையில் சேகரமாகிறது.

    பல ஆண்டுகளாக முழுமையாக துார்வாரப்படாமல் உள்ளதால், சிறிய மழைக்கு அணை முழு கொள்ளளவை எட்டி விடும். தற்போது,தென் மேற்கு பருவமழை இயல்பைவிட, 50 சதவீதம் கூடுதலாக பெய்து வருகிறது

    கடந்த ஒரு மாதமாக அணைக்கு வினாடிக்கு சராசரியாக 150 முதல், 200 கன அடி நீர் வரத்து உள்ளது. கடந்த ஒரு வாரம் தொடர்ந்து பெய்த மழையால், குந்தா அணைக்கு வினாடிக்கு சராசரியாக 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தண்ணீர் தேக்கி வைக்க முடியாத காரணத்தினால், நேற்று காலை 8 மணி நிலவரப்படி, இரு மதகுகளில், தலா 200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் 8 முறை அணை நிரம்பி திறக்கப்பட்டு உள்ளது.

    • குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • விரைவில் குந்தா அணை முழுமையாக தூர்வாரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஊட்டி 

    நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    குந்தா நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள அப்பர்பவானி அணையில் இருந்து அவலாஞ்சி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் நீர் மின் உற்பத்திக்குபின் அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளில் தேக்கி வைக்கப்படுகிறது.

    பின்னர், ராட்சத குழாய்கள் மூலம் இந்த நீர் குந்தா மின் நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு 60 ெமகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து, வெளியேற்றப்படும் நீர் குந்தா அணையில் தேக்கி வைக்கப்படுவதுடன் அணையில் அமைந்துள்ள சுரங்கபாதை வழியாக கெத்தை மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    கெத்தை மின்நிலையத்தில் இருந்து மின் உற்பத்திக்கு பின் வெளியேற்றப்படும் நீர் மீண்டும் சுரங்கபாதை வழியாக பரளி மின் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 180 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

    இந்நிலையில், கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்களின் மின் உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக உள்ள குந்தா அணையை தூர் வாராததால் அணையில் பெருமளவு சேறு, சகதிகள் தேங்கியுள்ளன. 50 சதவீதத்திற்கும் மேல் சேறு, சகதியுடன் கழிவுகளும் தேங்கியுள்ளன. குறைந்தபட்ச மழை பெய்தாலே அணை நிரம்பி விடும். மேலும் சேறு, சகதிகளால் அணையில் அமைந்துள்ள சுரங்க பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது.

    இந்த அடைப்பால் கெத்தை மின்நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதையடுத்து கடந்த 2 ஆண்டுக்கு முன் உலக வங்கி நிதியுதவியின் மூலம் குந்தா அணையை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஆனால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் சேறு, சகதி மற்றும் கழிவுகளை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொட்டுவதற்கு உரிய இடம் தேர்வாகாததாலும், காலதாமதம் ஏற்பட்டதால் குந்தா அணை தூர்வாரும் நடவடிக்கையிலும் தடங்கல் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து, தற்போது மின்வாரியம் தரப்பில் குந்தா அணை தூர் வார மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, அணைகள் மறு சீரமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் ரூ.40 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த திட்ட மதிப்பீடானது ஒன்றிய நீர்வளத்துறை மற்றும் உலக வங்கியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட் டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் விரைவில் குந்தா அணை முழுமையாக தூர்வாரப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளுக்கு நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது.
    • ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.

    மஞ்சூர்

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய அணையான 210 அடி உயரம் கொண்ட அப்பர் பவானியில் தற்போது 180 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அைண நிரம்பியுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சாண்டி நல்லா அணை தனது முழு கொள்ளளவான 49 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, போர்த்திமந்து உள்பட நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்கிறது. இதனால் ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.

    இதன் காரணமாக குடிநீர் மற்றும் மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளுக்கு நீர் வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மஞ்சூர் அருகே உள்ள குந்தா அணைக்கு நீர் வரத்து பெருமளவு அதிகரித்தது.

    அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவான 89 அடியை எட்டியது. இதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி மின்வாரிய உயர் அதிகாரிகள் முன்னிலையில் குந்தா அணையின் மதகுகள் திறந்து விடப்பட்டது.

    வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வரும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    தென்மேற்கு பருவமழையால் நீலகிரி மாவட்டம் குந்தா அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. மேலும், பரளி மற்றும் கெத்தை மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள குந்தாவில் நீர் மின்நிலையம் உள்ளது. அவலாஞ்சி, எமரால்டு, அணைகளில் தேக்கிவைக்கப்படும் நீரின் மூலம் இந்த மின்நிலையத்தில் 60 மெகாவாட், கெத்தை மின்நிலையத்தில் 175 மெகாவாட், பரளி மின்நிலையத்தில் 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தற்பொது மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது.

    இந்த மழையால் ஆறுகள், சிற்றோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக மின்சார உற்பத்திக்கு நீராதாரமாக உள்ள அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    குந்தா அணையின் மொத்த கொள்ளளவு 89 அடிகளாகும். தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணையில் நீர் மட்டம் 88 அடிகளாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அணையில் உள்ள சுரங்கபாதை மூலம் கெத்தை மின்நிலையத்துக்கு அதிகளவு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மழை மேலும் தீவிரம் அடையும் பட்சத்தில் குந்தா அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
    ×